• Sep 21 2023

இந்தவாரமும் பாக்கியலட்சுமி சீரியலின் முதலிடத்தை தட்டித் தூக்கிய சிறகடிக்க ஆசை!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இந்த வார Urban மற்றும் Rural கேட்டகரியில் முதலிடங்களை பிடித்த சீரியல்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த சேனல்களின் சீரியல்களில் கயல் சீரியல் மீண்டும் எதிர்நீச்சல் சீரியலிடம் விட்டுக் கொடுத்த முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த 32வது வாரத்திற்கான பட்டியலில் கயல், எதிர்நீச்சல், வானத்தை போல, சுந்தரி மற்றும் இனியா என அடுத்தடுத்த சன் டிவி தொடர்கள் தொடர்ந்து முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.

இதனிடையே விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்கள் இதில் 7, 8 மற்றும் 11வது இடங்களையே பிடிக்க முடிந்துள்ளது. சீரியல்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை சன் டிவியும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களும் பிடித்துள்ளன. அனைத்து சேனல்களும் நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை சீரியல்களுக்கும் கொடுத்து வருகின்றன.


விஜய் டிவியை பொறுத்தவரை இந்த வாரமும் தன்னுடைய முதலிடத்தை பாக்கியலட்சுமி தொடர் விட்டுக் கொடுத்துள்ளது. கடந்த பல மாதங்களாக இந்தத் தொடர், தொடர்ந்து சேனலில் முதலிடத்தை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தத் தொடரின் எபிசோட்கள் தொய்வடைந்த நிலையில், தற்போது சேனலின் சிறகடிக்க ஆசை தொடர் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் கோபி இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவரும். அவரது ரியாக்ஷன்களை ரசிகர்கள் அதிகமான விரும்பி பார்க்கும் நிலையில், கடந்த சில தினங்களாக அவர் தொடரில் அதிகமாக காணப்படவில்லை. மாறாக, இனியா மற்றும் பாக்கியா இருவரும் கல்லூரியில் சேரும் காட்சிகளே அதிகமாக ஒளிபரப்பானது. இதனால் இந்தத் தொடர், கடந்த சில தினங்களாக ரசிகர்களை கவரத் தவறிவிட்டது என்றே சொல்லலாம்.


Advertisement

Advertisement

Advertisement