• Oct 31 2026

ஷாருக்கான்-தளபதி விஜய் சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் அட்லீ! வைரல் வீடியோ!

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி பிளாக் பாஸ்டர் அடித்தவர். அதன் பின்னர் இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூலில் சாதனை பெற்றதோடு ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டார் இயக்குனராக மாறிவிட்டார் அட்லீ. 


தளபதி விஜய்யை வைத்து அடுத்து அடுத்து தெறி,மெரசல்,பிகில் என 3 படங்களை கொடுத்தார். எல்லாமே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள். இன்னும் அந்த படத்தின் பாடல்களை வைப் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை அடுத்து அட்லீ ஒரு படி மேலே சென்று பிரபல ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தினை வெற்றிகரமாக எடுத்து முடித்தார். 


அது 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் பிரபலமான அட்லீ பேன் இந்தியா இயக்குனராக அறிமுகமானார். அத்தோடு பிரபல தொழிலதிபர் அம்பானி வீட்டு கொண்டாட்டங்களுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். 


இந்நிலையில் அவர் ஒரு மேடையில் நடிகர் ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் வைத்து கதை எழுதி கொண்டிருக்கிறேன் கூடியவிரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை தருவேன் என்று கூறியுள்ளார்.தளபதி தனது 69வது திரைப்படத்துடன் இனி நடிக்கமாட்டேன் என்று சொன்ன நிலையில் இது எப்படி நடக்கும் என நெட்டிசன்கள் கருத்து பரிமாறி வருகின்றனர்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  





Advertisement

Advertisement