• Sep 22 2023

அனல் பறக்கும் Bigboss-7அப்டேட்... எப்போ ஆரம்பம்..? யார் யார் வாறாங்க..? விஜய் டிவி வெளியிட்ட அறிவிப்பு இதோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவெ்வான்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏரதளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ். 

100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல், மக்களின் ஆதரவோடு பிரபலங்கள் தங்களுடைய முன் பின் தெரியாத பிரபலங்களுடன் இந்த வீட்டில் எந்த விதமான சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து தங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய டாஸ்க் -ஆக உள்ளது.


இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் வெளியாகி இருக்கின்றது.

அதாவது விஜய் டிவி தமது சோசியல் மீடியா பக்கத்தில் "இன்று இரவு 7 மணி 7 நிமிடத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது காத்திருக்கவும்" என மொட்டையாக ஒரு அறிவிப்பினை பதிவிட்டிருக்கின்றனர். இதில் அவர்கள் வெளிப்படையாக பிக்பாஸ் எனக் குறிப்பிடாவிட்டாலும் 7 என்ற எண்ணை வைத்து அது பிக்பாஸ் சீசன் 7 அப்டேட் தான் என ரசிகர்கள் கண்டுபிடித்துவிட்டனர். 


எனவே இன்று மாலை 7மணிக்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகஉள்ளது. அதுமட்டுமல்லாது இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் எனவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த சீசனில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement