• May 19 2024

தனுஷின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் தனுஷ் உம் பிரபல இயக்குநர் வெற்றி மாறனும் இணைந்த படம் என்றால் அது சூப்பர் ஹிட் அடித்துவிடும்.

இதுவரை அவர்கள் இருவரும் படிக்காதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

மேலும் இதில் கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான வட சென்னை படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் தனுஷ் அன்பு என்கிற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.மேலும் இப்படம் வெளியான போதே அதன் இரண்டாம் பாகம் வர உள்ளதை படக்குழு அறிவித்திருந்தது.

அத்தோடு வட சென்னை படத்தின் முதல் பாகத்தை படமாக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளையும் இயக்குனர் வெற்றிமாறன் படமாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இரண்டாம் பாகத்திற்கான 50 நிமிட காட்சிகளை ஏற்கனவே அவர் படமாக்கி விட்டாராம். மேலும் எஞ்சியுள்ள காட்சிகளை குறுகிய காலத்தில் படமாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.மேலும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெற்றிமாறன் வட சென்னை படத்தின் 2-ம் பாகத்திற்கான ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதன்படி விடுதலை மற்றும் சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களின் ஷூட்டிங்கை முடித்த பின் வட சென்னை படத்தை தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement