• May 19 2024

பிரபல இளம் நடிகர் அகால மரணம்…இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இளம் நடிகரான சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள சினிமாவில் வளரும் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன். 37 வயதே ஆன சரத் சந்திரன் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். முன்னதாக ஐடி துறையில் பணியாற்றிய சரத் சந்திரன், ஜோஸ் பெல்லிசெரியின் அங்கமலி டைரிஸ் படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.

அத்தோடு கேரள மாநிலம் கொச்சியில் அப்பா சந்திரன் அம்மா லீலாவுடன் வசித்து வந்தார் சரத் சந்திரன்.மேலும் இவருக்கு ஷ்யாம் சந்திரன் என்ற சகோதரரும் உள்ளார். இந்நிலையில் நேற்று சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மரணம் பற்றி இதுவரை எந்தக்காரணம் வெளியாகவில்லை.

சரத் சந்திரனின் அகால மரணம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் சரத் சந்திரனின் மரணம் குறித்த தகவலை அங்கமலி டைரிஸ் படத்தில் அவருடன் நடித்த ஆண்டனி வர்க்கீஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் RIP brother என அவருடைய புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சரத் சந்திரனின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறவுள்ளது. அனீஸியா என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சரத் சந்திரன், ஒரு மெக்ஸிகன் அபரதா, சிஐஏ:கம்ரேட் இன் அமெரிக்கா, கூடி, மற்றும் ஒரு தாத்வீக அவலோகனம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement