• Sep 17 2024

கோட் படத்தின் அதிரடி ஹிட்.. சந்தோஷத்தில் புது கார் வாங்கிய வெங்கட் பிரபு

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய கோட்  திரைப்படம் தற்போது 300 கோடியை கடந்து சாதனை படைத்து வருகின்றது. இந்த திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இதன் டார்கெட் ஆயிரம் கோடியாக காணப்படுகின்றது.

பிரியாணி, மாநாடு, மங்காத்தா போன்ற பிரபல படங்களை இயக்கியவர் தான் வெங்கட் பிரபு. இவர் விஜய்யை வைத்து படம் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானதுமே ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்பட்டார்கள்.

அதன்படியே கடந்த 5ம் திகதி கோட் திரைப்படம் விமர்சையாக திரையரங்குகளில் வெளியானது. சுமார் 5000 திரையரங்குகளில் ரிலீசான இந்த படம், இம்முறை லண்டன் திரையரங்கிழும் வெளியாகி உள்ளது.

கோட் திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், லைலா, ஸ்நேகா, பிரேம்ஜி, ஜோகி பாபு, மோகன் என பலர் நடித்துள்ளார்கள். அதுமட்டுமின்றி த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரும் கேமியா ரோலில் நடித்திருந்தனர். இதன் காரணத்தினாலே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி  வருகின்றன.


இந்த நிலையில் தற்போது வெங்கட் பிரபு புது கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். அதாவது, புதிதாக Range Rover என்ற காரை வாங்கியுள்ளதோடு அதன் விலை 86 லட்சம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

வழக்கமாக படம் ஹிட்டானால் தயாரிப்பு நிறுவனம் தான் இயக்குநருக்கு காரை பரிசாக கொடுக்கும். தற்போது இப்படி ஒரு ட்ரெண்ட்  தமிழ் சினிமாவில் காணப்படுகின்றது. ஆனால் வெங்கட் பிரபு தனது சொந்த சம்பளத்திலேயே அந்த காரை வாங்கி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement