• Jan 19 2025

என் கல்யாணத்துக்கு வந்துடுங்க..! பாலகிருஷ்ணாவை நேரில் சென்று அழைத்த வரலட்சுமி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை உலகில் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை வரலட்சுமி. இவரின் தந்தை பிரபல நடிகர் சரத்குமார் ஆவார்.

தற்போது வரலட்சுமி தனுஷ் இயக்கும் ராயன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் ஜீலை 26 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இது தவிர பீனிக்ஸ் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகின்றார்.

தற்போது தனது நீண்ட நாள் காதலனான நிகோலாய் சச்தேவை   திருமணம் செய்ய உள்ளார். இவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.


வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்திலும் திருமண வரவேற்பு நிகழ்வுகள் சென்னையிலும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதன் காரணத்தால் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைமைகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றார் வரலட்சுமி.

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார். தற்போது இதன் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement