• Jul 22 2026

3 நாளில் முடங்கிய கோட் மினி டீசர்? சரியான வியூஸ் இல்லாம பிசினஸ் கூட டல்லா..?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் இருந்து தற்போது வரையில் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ன்று நள்ளிரவில் கோட் திரைப்படத்திலிருந்து மினி டீசர் வெளியாகி இருந்தது. அதில் அப்பா, மகன் என விஜய் இரண்டு கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், கோட் படத்தில் இருந்து வெளியான மினி டீசர் தற்போது மூன்று நாட்களைக் கடந்தும் 10 மில்லியன் வியூசை கூட தாண்டவில்லை, இது ஏஜிஎஸ் தரப்புக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த பாடலை எக்கச்சக்கமான பட்ஜெட்டை போட்டு வெங்கட் பிரபு எடுத்துள்ளதோடு, ஏகப்பட்ட நடிகர்கள் மற்றும் சிஜி காட்சிகள் என 300 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளாராம். ஆனாலும் கோட் திரைப்படத்திற்கு பெரிதாக பிசினஸ் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.


மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் பவதாரணியை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பாட வைத்த சின்ன சின்ன கண்கள் பாடலும் வெளியாகி இரண்டு நாட்களில் ஆறு மில்லியன் வியூஸுகளை தான் பெற்றுள்ளதாம். இதில் யங்காக காணப்படும் விஜயின் சிஜி காட்சிகளும் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்றும், கோட் படம் விஜய்க்கு வெற்றியை கொடுக்குமா என்பதே சந்தேகமாக உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றன.

இவ்வாறு கோட் படத்தின் ஷார்ஸ் வீடியோ வெறும்  ஒன்பது மில்லியன் வியூசைத்தான் பெற்றுள்ளது. ஆனால் 250 கோடி சம்பளம் வாங்கும் விஜய் அதற்கு வொர்த்தான படத்தை கொடுப்பாரா என கேள்விகள் எழுந்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement