• Jun 29 2024

போலீஸ் என்ற போர்வையில் ஆனந்தியை கடத்திச் சென்ற கும்பல்.. பரபரப்பான ப்ரோமோ

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு என்றே பெயர்போன சேனல் தான் சன் டிவி. இதில் ஒரு சீரியல் முடிவுக்கு வர முன்பே அடுத்த சீரியலை களம் இறக்கி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து விடுவார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.அடுத்த வாரமே மருமகள் என்ற சீரியலை களமிறக்கினார்கள்.

புதிதாக ஒளிபரப்பான மருமகள் சீரியலில் விஜய் டிவி சீரியல் நடிகையான கேப்ரில்லா நடித்திருந்தார். இந்த சீரியல் ஒளிபரப்பாகி ஒரு சில நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில்  இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.


இந்த நிலையில் தற்போது வெளியான சிங்கப் பெண்ணே சீரியலின் ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

குறித்த ப்ரோமோவில் விசாரணை என்ற பெயரில் ஆனந்தியை பெண் போலீசார் அழைத்துச் செல்கின்றார்கள்.

இதை கேள்விப்பட்ட மகேஷ், அன்பு மற்றும் வார்டன் மூன்று பேரும் போலீசுக்கு சென்று தேட அங்கு அப்படி யாரும் வரவில்லை என அதிர்ச்சி கொடுக்கின்றார்கள். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

எனவே பொலிஸ் என்ற போர்வையில் ஆனந்தியை யாரோ ஒரு கடத்தல் கும்பல் கடத்தி சென்றுள்ளது.

Advertisement

Advertisement