• May 20 2024

இதுவரை யாரும் கொண்டாடியிருக்க முடியாத வகையில் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வனிதா. இவர் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜயக்குமாரின் மகளாவர். வெள்ளித்திரையில் படு பிஸியாக இருந்து வரும் வனிதா, கடந்த சில வருடங்களாக சர்ச்சைகள், குடும்ப பிரச்சனைகள் என வெள்ளிதிரையில் முகம் காட்டாமல் இருந்தார். 

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் 3' சீசன் மூலம் சின்னத்திரையில் நுழைந்திருந்தார். அந்நிகழ்ச்சியில் காரசாரமான போட்டியாளராக இருந்த இவர் பிக்பாஸூக்குப் பின் ‘குக்வித் கோமாளி’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமையலில் கை தேர்ந்தவரான வனிதா போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றியும் பெற்றார்.

அதன் பின்னர் 'கலக்கப் போவது யாரு' என்ற ஷோவில் நடுவராக கலந்து கொண்டார். மேலும் பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியிலும் பங்கு பற்றியிருந்தார். அதாவது சுரேஷ் சக்கரவர்த்தியுடன் இணைந்து ஆடிய அவர், நடுவர் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி அதிரடி காட்டினார். 

இவ்வாறாக பல தடைகளைத் தாண்டி வருகின்ற வனிதா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர். அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களையும், பிசினஸ் தொடர்பான பதிவுகளையும் இட்டு வருவார்.

இவை ஒருபுறமிருக்க, தனது மகளுடன் இணைந்து யூடியூப் மூலம் உணவுத் தயாரிப்பு பற்றிய வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.



அக்டோபர் 5, வனிதா விஜயகுமாரின் பிறந்தநாள். பாங்காக் போயிருந்த அவர், அங்கு தனது பிறந்தநாளை வினோதமாக கொண்டாடியிருக்கிறார்.அத்தோடு  பிறந்தநாளுக்கு எல்லாரும் கேக் வெட்டி கொண்டாடுவோம். ஆனால், வனிதா, நண்டு சமைத்து கொண்டாடியிருக்கிறார். கேக் போல அதை தன் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ள வனிதா, 'ஹப்பி ஃபர்த் டே டூ மீ' என தனக்குத் தானே பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்த வீடியோவும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படி ஒரு பிறந்தநாளை இதுவரை யாரும் கொண்டாடியிருக்க முடியாது என்பது போல தான் வனிதா ஸ்டேட்மெண்ட் இருக்கிறது. பார்க்கலாம், வீடியோவில் என்ன இருக்கிறது என்று!


Advertisement

Advertisement