மலையாள சினிமாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சி அதிர்வலைகளை தென்னிந்திய அளவில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்கள்.
2017 ஆம் ஆண்டிலேயே ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து தன்னுடைய அறிக்கையை இந்த கமிட்டி வெளியிட்ட நிலையில், தற்போது 5 ஆண்டுகள் கடந்து சில நாட்களுக்கு முன்பு கமிட்டி அறிக்கை மீண்டும் வெளியானது. இதில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் தன்னுடைய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தாக்கம் கேரளாவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து, நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை வெளிப்படையாக பேசி வருகின்றார்கள்.
இந்த நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி கவிஞர் வைரமுத்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது சினிமாவில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இத்தகைய கமிட்டிகள் வேண்டும். பெண்கள் சுரண்டப்படுவதாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் அவர்கள் இதிலிருந்து விடு பெற பெண்மை என்ற கருத்தை நீக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆண்மை, பெண்மை எனப் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை இருவரும் சரிசமம் தான் என்று கூறியுள்ளார்.
அத்துடன் ஒருவர் மற்றவரை சீண்டுவது ஒரு பாலினம் பலவீனமானது என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் பெண்ணினம் பலவீனமான பாலினம் அல்ல. இந்திய கல்வித்துறை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பயிற்சியை கொடுக்க வேண்டும். விளையாட்டு பயிற்சி, எழுத்துப் பயிற்சி மட்டும் அவர்களுக்கு போதாது. ஒரு புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாகவே ஹேமா கமிட்டியை பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
Listen News!