தமிழ் சினிமாவில் வைகை புயல் வடிவேலுவுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள். இவருடைய முகபாவனை, உடல் தோற்றம், அசைவு என அனைத்தையும் மாற்றி நொடிப்பொழுதில் பார்ப்போரை வயிறு வலிக்க சிரிக்க வைப்பதில் நகைச்சுவை மன்னனாக காணப்படுகின்றார்.
வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல படத்தில் நடிகர் சிங்கமுத்து நடித்துள்ளார். திரையில் இவர்களின் காம்பினேஷனை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். எனினும் தற்போது இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக நடித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், நடிகர் சிங்கமுத்து பல youtube சேனல்களில் நடிகர் வடிவேலு குறித்து படு மோசமாக பேசியுள்ளார். இதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத வடிவேலு தன்னுடைய மானத்தையும் மரியாதையையும் கெடுத்த சிங்கமுத்து மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் பொதுமக்கள் மத்தியில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி சுமார் 5 கோடி ரூபாய் வரை மான நஷ்ட ஈடாக வழங்கும் படியும் சிங்கமுத்துக்கு உத்ரவிட வேண்டும் எனவும் தன்னை பற்றி அவதூறாக பேசிய அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது நடிகர் சிங்கமுத்துக்கு மனுவுக்கு பதில் அளிக்கும் படி உத்திரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிங்கமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவகாசம் வேண்டும் எனக்கு கேட்டு உள்ளார்.வக்காலத்து தாக்கல் செய்யவும் பதில் தாக்கல் செய்யவும் இரு வாரங்கள் அவகாசம் வழங்கி விசாரணை தள்ளி வைத்துள்ளார் நீதிபதி.
Listen News!