• Apr 28 2024

திடீரென தமிழ் நாட்டில் பின்னடைவை சந்தித்த 'வாத்தி'.. 6நாட்கள் முடிவில் செய்த வசூல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.


தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்த வண்ணமே இருக்கின்றனர்.


அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ரூ. 50 கோடியை கடந்து வசூல் செய்து வரும் வாத்தி திரைப்படம் முதல் வாரத்தின் இறுதிக்கு பின் தமிழ்நாட்டில் மட்டும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இருப்பினும் இப்படம் வெளிவந்து கடந்த 6 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement