• Mar 28 2023

`“என்னை கேள்வி கேக்குற ரைட்ஸ் உங்களுக்கு கிடையாது”- பிக்பாஸ் விக்ரமன், மோகன் ஜி மோதல்

Jo / 1 month ago

Advertisement

Listen News!

ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன் ஜி. இவரின் 3வது படமான செல்வராகவன் மற்றும் நட்டி (எ) நடராஜன் நடித்த பகாசூரன திரைப்படம் கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் வெளியானது.

இந்த  திரைப்படம் இளம்பெண்களை குறிவைத்து நடக்கும் ஆன்லைன் குற்றங்களை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் ,மோகன் ஜியிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.அதற்கு அவர்  என்ன விளக்கம் கொடுத்துள்ளார் என்று  இங்கு பார்ப்போம்.

பாசுரம் படத்தில் வரும் பேக் மேரேஜ் என்பது அரசியலால் தூண்டப்பட்ட புனைவு தானே ?என விக்ரம் கேள்வி ஒன்றை எழுப்பினர் .இதற்கு இப்ப உங்கள பத்தி எனக்கு விளங்கிச்சு .இது புனைவு தான் இதுக்கு அப்புறம் உங்களுடன் பேசுவது  வேஸ்ட் இந்த படத்திற்கு நீங்கள் தவறான சாயம் பூச நினைக்கிறீர்கள் .யாருக்கும் முகமூடியாக செயற்பட வேண்டாம் .அடுத்து நான் பாட்டாளி கட்சியில் இருந்து வந்த அறிக்கையினை தான் படமாக்கியுள்ளேன் என வெளிப்படையாக  எனது டுவிட்டரில் சொல்லி இருக்கிறேன்.

கேள்வி :-நீங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை படம் ,இது ஒரு குறித்த கட்சிக்கு எதிரான படம் அப்படின்னு நீங்க சொல்லி இருக்கிறீர்களா ?

பதில் ;-மறுபடியும் உங்கள ஆழமாக சொல்லி இருக்கிறீங்க,அதாவது நீங்க எந்த முகமூடியாக இருந்து பேசுறீங்க எண்டு..பாட்டாளி மக்கள் கட்சி கொள்கை படம் எண்டு எங்கு சொல்லியிருக்கிறன்.பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கையினை நான் படித்தேன் ,ஆராய்ச்சி செய்தேன்.அதை விளங்கிக்கொண்டு படமாக எடுத்தேன். உங்களுக்கு என்னை கேள்வி கேக்குற ரைட்ஸ் கிடையாது,யார் உங்களுக்கு இந்த ரைட்ஸ் கொடுத்தது? நான் இல்லை என்று சொல்லுகிறேன் ,நீங்க ஆமா எண்டுறீங்க.

நான் என்ன சொல்லோணுமோ,அத சரியா படத்தில சொல்லியிருக்கன்  ,இந்த படமா பாக்குறவங்க படமா பார்க்கட்டும் ,இந்த படத்துல இருக்குற ஒரிஜினல கனெக்ட் பண்றவங்க கனெக்ட் பண்ணிக்கட்டும்.என்று கூறியுள்ளார்.

மோகன் ஜி  மற்றும் விக்ரமனின் இந்த வாக்குவாத வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்

Advertisement

Advertisement

Advertisement