• Apr 01 2023

தனக்கு ஹார்ட் அட்டாக் இருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாத மயில்சாமி; இறுதி நேர சம்பவங்களை விபரிக்கிறார் நண்பன் எம்.எஸ்.பாஸ்கர்

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான மயில்சாமி  சிவராத்திரி அன்று  உடல்நலக் குறைவு காரணமாக காலமாகி இருந்தார் .திரையுலகமே சோகத்தில் மூழ்கி இருந்தது.பலரும் தங்களின் இரங்கல்கலைகளை தெரிவித்து ,அவரது நினைவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பன் எம்.எஸ் பாஸ்கரன் அவருடைய நினைவுகளை பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார்.அவர் கூறியவற்றை இங்கு தொகுத்து பார்ப்போம். 

''மயில்சாமி எனது நண்பன் எனக்கு பிடித்தமான ஒருவன் என்னை விட சிறியவன் தான் ,ஆனாலும்  இருவரும் வாடா போடா என்று தான் பேசுவோம் எதைப் பற்றியும் கவலைப் பட மாட்டார். எல்லாரோடையும் ஜாலியாக பேசுவார்.ஒரு தர்ம  சிந்தனையாளர் .பசியால் ஒருவன் முகம் பாடி இருந்தால் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார் .சூட்டிங் தமில் ஏதாவது ஒரு சமையல் பண்ணுவாரு .

தனக்கு ஹார்ட் அட்டாக் இருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை .சிவராத்திரிக்கு மூன்று நாளுக்கு முன் தொலைபேசியில், சிவராத்திரிக்கு கோவிலுக்கு போக அழைத்தார். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றேன்.சரிடா எனக்கு கூப்பிட வேண்டிய கடமை கூப்பிட்டேன் சரி உன் வேலையை பாரு அப்படின்னு சொல்லிட்டு கோவிலுக்கு போயிட்டாரு.

அடுத்த நாள் சிவனை வணங்கிய சிவபக்தனாக,சிவனோடயே போய்ட்டாரு.மாசம் மாசம் தவறாமல் கிரிவலம் போயிடுவாரு .நான், அவன் எல்லோருமே தீவிர சிவ பக்தர்கள். தெருவுல இருக்குற நாய்களுக்கு உணவளிப்பாரு ,வாக்கிங் போறப்ப வாத்துகளுக்கு பொரி வாங்கி போட்டுட்டு இருப்பாரு,எல்லா உயிரினங்களும் சாப்பிட வேண்டும்என்று நினைப்பவர்.

சமாபதி என்ற படம் தான் ,நாங்கள் இருவரும் இறுதியாக பண்ணியிருந்தோம்.அவன் குடும்பத்தாருக்கும் எனது குடும்பத்தாருக்கும் தெரியாத எங்களுடைய ரகசியங்கள் எங்கள் இருவருக்கும் தான் தெரியும்.எதையும் நாங்கள் மறைத்துக் கொண்டதில்லை.அவருக்கு வண்டி ஓட்டத் தெரியாது ஒருநாள் ஹாண்ட் பிரேக் எடுக்காமல்  வண்டியோட்டி இருக்காரு அப்படியான ஒரு அப்பாவியானவர்.

மயில் என்னை மாமா எண்டு தான் கூப்பிடுவாரு.அன்று சுடுகாட்டுக்குப் போய் வந்த பிறகு தங்கச்சி 'என்ன அண்ணா உங்க மாப்பிள்ளைய அனுப்பிட்டீங்களா'? எண்டு கேட்ட போது எனது மனசு உடைஞ்சு போயிட்டு .மயிலு ஒழிவு,மறைவு இல்லாதவரு .எதை சொல்லோணும்,சொல்லக் கூடாது என்று தெரியாத அப்பாவி .அடுத்த பிறப்பிலையும் இதே மயில்சாமியாக பிறக்க வேண்டும் என நான்,அவரை ஆசீர்வதிக்கிறேன்'' .என கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement