• May 20 2024

உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் தமிழக வசூல் விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் நெஞ்சுக்கு நீதி. இயக்குநர் அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிக்கள் 15’. இந்த படத்திற்கு இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழில் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஒன்று.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் தான்யா ரவிச்சந்திரன், சிவானி ராஜசேகர், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்.

படத்தில் நேர்மையான ASP அதிகாரியாக விஜயராகவன் என்ற கதாபத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார்.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது. தற்போது படம் 3 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ. 5.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement