• May 19 2024

உதயநிதி எளிமையாக நடித்துள்ளார்- நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தைப் பார்த்த கீர்த்தி சுரேஷ் போட்ட டுவிட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தை போனி கபூர் மற்றும் ஷு ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஹிந்தியில் வெளிவந்த ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் இப்படம் என்றாலும், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் இந்தத் திரைப்படம் இன்றைய தினம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த படத்தின் சிறப்புக் காட்சியை மாமன்னன் படக்குழுவினர் சமீபத்தில் பார்த்தனர். இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோருக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி படத்தைப் பாராட்டி டுவிட் செய்துள்ளார். அதில் “அழகான படம். உதயநிதி எளிமையாக தனது வேடத்துக்கான பெருமையை சேர்த்துள்ளார். தற்காலத்துக்கு நெருக்கமான ஒரு படத்தைக் கொடுத்தற்கு நன்றி போனி கபூர் சார். மாமன்னன் படக்குழுவினர் சார்பாக வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement