டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களில் சன் டிவி சீரியல்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அந்த டிவி அவ்வப்போது எடுக்கும் அதிரடி நடவடிக்கையை காரணம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கும் ’மல்லி’ சீரியல் சனி ஞாயிறு உட்பட வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி சீரியல் அதிகபட்சமாக திங்கள் முதல் சனி வரை மட்டுமே ஒளிபரப்பாகும் நிலையில் சன் டிவி சீரியல்கள் 7 நாட்களும் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகமான புள்ளிகளை பெற்று முதல் சில இடங்களை பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் சன் டிவியின் தந்திரமாக கருதப்படும் நிலையில் விஜய் டிவியும் வாரத்தின் 7 நாட்களில் சில முக்கிய சீரியல்களை ஒளிபரப்பலாம்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ’அன்பே வா’ சீரியல் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் ’மல்லி’ என்ற சீரியல் தொடங்கப்பட உள்ளது. இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு வாரத்தின் ஏழு நாட்களிலும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று முதல் இரண்டு சன் டிவி சீரியல்களை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ’இனியா’ மற்றும் ’மிஸ்டர் மனைவி ’ சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ’இனியா’ தொடர் இன்று முதல் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.
அதேபோல் ’மிஸ்டர் மனைவி’ சீரியல் வாரத்தின் ஆறு நாட்களில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான நிலையில் இன்று முதல் அனைத்து நாட்களிலும் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாக இந்த இரண்டு சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்திற்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!