• Jul 04 2024

காஜல் அகர்வால் வீட்டில் இன்று இரண்டு விசேஷம்….வாழ்த்துக்கூறும் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால்.

"பழனி" என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு கெளதம் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால் கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் திகதி ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு நீல் கிடச்லு என்று பெயர் வைத்தனர்.

அந்நிலையில் நீல் பிறந்த பிறகு வந்திருக்கும் முதல் தந்தையர் தினம் இன்று.அதுமட்டுமல்லாது நம்ம காஜல் அகர்வாலின் பிறந்த தினமும் இன்று தான்.

இதனால் குஷியடைந்த ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறுவதோடு, கெளதமிற்கும் தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு "கர்ப்பமான பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார் காஜல். மகன் வளர்ந்த பிறகு கண்டிப்பாக மீண்டும் படங்களில் நடிக்க வர வேண்டும்" என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்கள் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement