• Jul 07 2024

ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்கவிருக்கும் பிரபல கன்னட நடிகர்..? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிவராஜ்குமார்.

கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

நடிகர் சிவராஜ்குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் "ஜெயிலர்" திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக நடிகர் சிவராஜ்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் "ரஜினி அவர்களுடன் நடிக்க யாருக்குத்தான் பிடிக்காது என்றும், நெல்சன் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேனா? இல்லையா? என்பதை அதிகாரபூர்வமாக நெல்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தான் தெரிவிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் "நெல்சன் என்னிடம் கதை கூறியது உண்மை தான் என்றும், அந்தக் கதையைக் கேட்டு தான் ஆச்சரியம் அடைந்ததாகவும்" சிவராஜ்குமார் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் சிவராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதும் ரஜினியை ராஜ்குமாருக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement