• Jul 09 2025

நீட் எக்ஸாம் விஜயின் கருத்தினை மறுத்த தமிழிசை சௌந்தரராஜன் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நேற்று சென்னை திருவான்மியூரில் வெகு சிறப்பாக நடைபெற்றது,சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்ட இந்த விழாவினை பற்றி நேற்று முழுவதும் வெகுவான பாராட்டுதல்களுடன் பேசப்பட்டது.

கல்வி விருது வழங்கும் ...

இரண்டாம் நாள் விஜய் உரையாற்ற மாட்டார் என கூறப்பட்ட நிலையில் நேற்று மேடையில் பேசிய விஜய் மாணவர்களுக்கான வாழ்த்துக்களோடு மருத்துவ படிப்பிற்கான "நீட் எக்ஸாம் தேவைதானா என்ற கேள்வியுடன் நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது" என குறிப்பிட்டிருந்தார்.


இதுதொடர்பான பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த  தமிழிசை சௌந்தரராஜன் "விஜயின் கருத்தை முற்றாக மறுப்பதாகவும் , மாணவர்கள் நீட்டை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் அரசியல்வாதிகள் தான் ஏற்க மறுக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

Advertisement

Advertisement