• Jul 07 2024

இதுவரை 100 கோடி கிளப்பில் சேர்ந்துள்ள நடிகர்கள் விபரம் ! புதிதாக சேர்ந்துள்ள விஜய் சேதுபதி!

Nithushan / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகி பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது. இவ்வாறு இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள திரைப்படங்களின் பட்டியலானது மகாராஜா திரைப்படத்தின் வசூலை தொடர்ந்து வைரலாகின்றது.


அவ்வாறு தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கிய சிவாஜி திரைப்படம் மூலம் ரஜனி காந்த் இந்த பட்டியலில் சேர்ந்ததை தொடர்ந்து , ரவிக்குமார் இயக்கத்தில் தசாவதாரம் மூலம் கமலஹாசனும் இதில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து துப்பாக்கி திரைப்படம் மூலம் விஜயும் , மங்காத்தா திரைப்படம் மூலம் அஜித்குமாரும் 100 கோடி கிளப்பில் சேர்ந்தனர்.


இதன் பின் சிங்கம் திரைப்படம் மூலம் சூர்யா , ஐ திரைப்படம் மூலம் விக்ரம் இதில் இணைந்ததுடன் மார்க் ஆண்டனி மூலம் விஷால் , கைதி திரைப்படம் மூலம் கார்த்தியும் இதில் இணைந்தனர். மற்றும் மாநாடு மூலம் சிம்பு , அசுரன் மூலம் தனுஷ் , காஞ்சனா மூலம் ராகவா லாரன்ஸ் இணைந்ததை தொடர்ந்து கோமாளி பட இயக்குனர் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் இந்த கிளப்பில் சேர்ந்ததை தொடர்ந்தே இன்று 118 கொடிவரை வசூல் செய்த மகாராஜா திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதியும் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றார்.

Advertisement

Advertisement