• Jan 18 2025

புது சாகச பயணதிற்கு தயாராகுங்கள், வெளியானது "மாய புத்தகம்" ரிலீஸ் டேட் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

வெகுகாலமாக கிடப்பில் இருந்த "மாய புத்தகம்" திரைப்படத்தின் வெளியீட்டிற்கான அறிவிப்பு ரசிகர்களுக்கு படத்தின் மீதான பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.ராமா ​​ஜெயபிரகாஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிக்கும் கற்பனைத் திரைப்படமான "மாய புத்தகம்" அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியைக் அறிவித்துள்ளது.

Image

"மாய புத்தகம்" படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான உத்தியோபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.அதன்படி வருகிற ஜூலை 19ம் தேதி உலக அளவில் திரையரங்குகளில்  "மாய புத்தகம்" படம்  திரையிடப்படுவதாக அறிவிக்கபட்டிருக்கிறது.

Maya Puthagam Movie Preview - www ...

இப்படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இளவரசு, ஆடுகளம் நரேன், அபர்னதி, அசோக் குமார், மற்றும் லோகேஷ் என நடிகர்கள் வரிசை நீள்கிறது.கடந்த 2022 இல் ரவி விஜய் ஆனந்த் இசையில் படத்தின்  'கண்ணால் கண்ணால் பேசி' பாடல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement