• Jul 12 2026

அதுல்யா வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம்? பின்னணியில் சிக்கியது யார் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது சொந்த ஊர் கோவை ஆகும். இவர் கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகின்றார்.

அதுலயா வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2000 ரொக்க பணம் திருடு போயிருந்தது. இதை அடுத்து அதுல்யாவின் தாய் வடவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரித்து வந்துள்ளனர்.


இந்த நிலையில் அதுலயா வீட்டில் வேலை பார்க்கும் 46 வயது உடைய பெண் ஒருவரே திருடி இருக்கலாம் என சந்தேகித்து அவரை விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மேலும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் குறித்த பெண் தனது தோழியுடன் இணைந்து அதுல்யா வீட்டில் உள்ள பணம் மற்றும் பாஸ்போர்ட் திருடியது ஒப்புக் கொண்டுள்ளார்.

இதை அடுத்து போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பாஸ்போர்ட்டை மீட்பதற்கான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

Advertisement

Advertisement