• May 19 2024

தளபதி 67 தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்டர் -குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவர் நடிப்பில்வெளிவரும் அனைத்து படங்களும் ரசிகர்களிடத்தே பெரும் ஹிட் கொடுத்து விடும்.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கடும் விமர்சனங்களை சந்திதாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருந்தது என தகவல் கூறுகின்றளர்.

மேலும் இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்தி வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரும் ஜுன் 22 ஆம் தேதி விஜய் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். மேலும் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் CDP எல்லாம் வெளியிட்டு நேற்றில் இருந்து கொண்டாட்டம் தொடங்கியது.

அத்தோடு தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் அதனை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் இந்த கூட்டணியின் அறிவிப்பு வரும் ஜுன் 22 வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்தை தெரிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் இதை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement