• Jul 07 2024

ஐதராபாத் புறப்படும் சூப்பர்ஸ்டார் ! புதிதாக கிடைத்த கூலி அப்டேட் !

Nithushan / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றளவும் டாப் ஸ்டார் பட்டியலில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜனிகாந்த் ஆவார். ரசிகர்களால்  சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் இவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


மாஸ்டர் , விக்ரம் , லியோ என பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் நடிக்கும் திரைப்படம் கூலி ஆகும். அதிக எதிர்பார்ப்பு காணப்படும் குறித்த படம் தொடர்பாக அப்டேட் கிடைத்துள்ளது.


'கூலி' படப்பிடிப்புக்காக இன்று சென்னையில் இருந்து ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்; லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் கூடிய விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர் பார்க்கின்றனர்.


Advertisement

Advertisement