• Jul 12 2025

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தோட இயக்குனர் இவரா ?

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதியின் 50 வது படமான "மகாராஜா" வெளியாகி இரண்டு வாரங்களை  கடந்த நிலையிலும் இன்னும் குறையாத தியேட்டர் நிரம்பிய ரசிகர்களுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது.அடுத்து விஜய் சேதுபதி ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்', மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் 'ட்ரெயின்' படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Vijay Sethupathi: Makkal Selvan Has Had ...

இவ்விரண்டு படங்களின் நிறைவுடன் விஜய் சேதுபதி இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவுடன் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. RGV என முதலெழுத்துக்களால் பெரிதும் அறியப்படும் ராம் கோபால் வர்மா புதிய இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.


இதுவரை உத்தியோக பூர்வ செய்திகள் ஏதும் வெளியாகாத நிலையிலும் நம்ப தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து வெளியாகியிருக்கும் இச் செய்திக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கிறது விஜய் சேதுபதி மற்றும் ராம் கோபால் வர்மாவின் சந்திப்பு புகைப்படங்கள்.


Advertisement

Advertisement