தமிழில் பல திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மாத்திரமே இரண்டு , மூன்று என பல பாகங்கள் கடந்து செல்கிறது அவ்வாறே அந்த வரிசையில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படத்துக்கு அடுத்த பாகம் வர உள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகிய பிச்சைக்காரன் திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி தானே இயக்கி நடித்தும் இருந்தார்.
இந்த நிலையிலேயே 'பிச்சைக்காரன் பாகம் 1, 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கில் பிச்சைக்காரன் பாகம் 3 தயாராக உள்ளதாகவும் தானே இயக்கி நடிப்பதாகவும் 2026-ல் வெளியாகவாய்ப்பு உள்ளது என்றும் விஜய் ஆண்டனி தகவல் வழங்கியுள்ளார்.
Listen News!