• Jul 27 2024

கோமாளிகளை அசிங்கமாக திட்டிய TTF வாசனின் காதலி! பொங்கிய நெட்டிசன்கள்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில், இதன் ஐந்தாவது சீசன் அண்மையில் ஆரம்பமானது.

இந்த நிகழ்ச்சியின் நடுவராக செப் தாமுவுடன் பிரபல சமையல் கலைஞரான மதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது நடுவராக இணைந்துள்ளார்.

அதேபோல இந்த முறை ரக்ஷனுடன் சேர்ந்து கடந்த நான்கு சீசனிலும்  கோமாளியாக காணப்பட்ட மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதன் போட்டியாளர்களாக ஸ்ரீகாந்த் தேவா, அக்ஷய் கமல், வசந்த் வஷி, பிரியங்கா தேஷ்பாண்டே, சாலின் சோயா, சூப்பர் சிங்கர் பூஜா, சுஜிதா உள்ளிட்ட பத்து போட்டியாளர்கள் பங்கு பற்றி வருகிறார்கள்.


இந்த நிகழ்ச்சிக்கு யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசனின் காதலியும் பங்கு பற்றி உள்ளார். கடந்த வாரம் தனது காதலியை தொட்டு தொட்டு பேசுவதாக பொங்கி இருந்தார் வாசன்.

இந்த நிலையில், இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக தற்போது ஷாலின் சோயா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

அதாவது, கடந்த வார நிகழ்ச்சியில் ஷாலின் சோயாவுக்கு கோமாளியாக தங்கதுரை வந்திருந்தார். அப்போது அவரை வேலை வாங்க கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல், மலையாலயத்தில் 'பிச்சைக்கார நாயே இங்க வாடா, முட்டாள் நாயே, பொருக்கி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி இருந்தார். இது தற்போது பேசுபொருளாக எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement