• Sep 01 2025

மீனாவின் நிலைமையைப் பார்த்து வேதனையில் தவிக்கும் முத்து.! மனோஜை தேடி வரும் சிக்கல்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, அண்ணாமலை விஜயாவைப் பார்த்து மருமகளோட அன்பா பழகு என்கிறார். மேலும் மீனா உனக்கு மரியாதையை கொடுக்கிறாள் அதுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளு என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா எதுவும் கதைக்காமல் அமைதியா யோசிச்சுக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து மீனா காய்ச்சல் வந்து தவிக்கிறதைப் பார்த்த முத்து உடனே பாட்டிக்கு போன் பண்ணி என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்கிறார். 


பின் பாட்டி முத்து கிட்ட கசாயம் எப்புடி செய்யணும் என்று போனில சொல்லுறார். முத்துவும் அப்புடியே செய்து மீனாவுக்கு கொடுக்கிறார். அதைக் குடிச்ச மீனா அழுதுகொண்டே முத்துவின்ர கையைப் பிடிக்கிறார். அதைப் பார்த்த முத்து என்ன நடந்த என்று கேட்கிறார். பின் மீனா முத்து கிட்ட சீதாவை அடிச்சிட்டேன் என்கிறார். அதைக் கேட்ட முத்து எதுக்காக அடிச்ச என்று கேட்க மீனா எல்லா விசயத்தையும் சொல்லுறார்.

இதனை அடுத்து முத்து இதில சீதா மேல எந்தப் பிழையும் இல்ல அருண் நல்லா கேம் விளையாடுறான் என்கிறார். மேலும் நீ சீதாவோட சண்டை பிடிச்சிருக்க கூடாது என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து சீதா சத்யாவிற்கு போன் பண்ணி அக்கா இவ்வளவு நாளா இப்புடி எல்லாம் கதைச்சதே இல்ல என்று சொல்லி அழுகிறார்.


பின் அருண் சீதாவப் பார்த்து எதுக்காக நீ இதை நினைத்து அழுகிற என்று கேட்கிறார். மேலும் முத்துவுக்கு என்ன பிடிக்கல அதுக்கு என்ன பண்ணுறது என்று தான் தெரியல என்கிறார். அதைத் தொடர்ந்து மனோஜோட ஷோரூமுக்கு ராஜாவும் ராணியும் வக்கீலோட வந்து நிக்கிறார்கள். அதைப் பார்த்த மனோஜ் எதுக்காக வந்தனீங்க என்று கேட்கிறார். பின் அவங்க ரெண்டு பேரும் தங்களுக்கு டிவி வேணும் என்று சொல்லுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement