பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் தரையில நித்திர கொள்ளுறதைப் பார்த்த மயில் எதுக்காக இதில நித்திர கொள்ளுறீங்க என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் அது என்னோட விருப்பம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மயில் அப்ப நானும் உங்க கூட தரையிலேயே நித்திர கொள்ளுறேன் என்கிறார். அதனை அடுத்து ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள்.
பின் சரவணன் நான் வெளியில போய் நித்திர கொள்ளுறேன் என்று சொல்லிட்டு ரூமுக்குள்ள இருந்து வெளியில போறார். இதனை அடுத்து மயிலும் சரவணனுக்கு பின்னாடியே போறார். பின் ரெண்டு பேரும் வெளியில நின்று கத்துறதைப் பார்த்த கோமதி என்ன செய்யுறீங்க என்று கேட்கிறார். அதுக்கு சரவணன் வேற எதையோ சொல்லி சமாளிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ராஜி கதிர் கிட்ட டான்ஸ் போட்டியில கலந்து கொள்ளப்போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் இப்போதைக்கு இது ஒன்னும் தேவையில்ல என்கிறார். மறுநாள் காலையில கதிரும் ராஜியும் practice செய்யுறதுக்காக ground-க்கு போய் நிற்கிறார்கள். அதைத் தொடர்ந்து கதிர் தனக்கு இந்த டான்ஸ் ஷோவுக்கு போறதில விருப்பம் இல்ல என்கிறார்.
பின் ராஜி பாண்டியனுக்கு தான் டான்ஸ் போட்டியில கலந்து கொள்ளப் போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே மயில் நான் உனக்கு காட்டின விளம்பரத்தை பார்த்தா இந்த முடிவெடுத்தனீ என்று கேட்கிறார். பின் கோமதி இதில எல்லாம் கலந்து கொள்ள வேணாம் என்று சொல்லிப் பேசுறார். பாண்டியனும் அதேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!