ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாக்கி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், நட்டி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஸ்லாட் அண்ட் பேப்பர் லுக்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
அதன்பின் தற்போது மற்றொரு புதிய லுக்கில் இருக்கும் அஜித்தின் பபுகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதே போல் கதாநாயகி த்ரிஷாவின் புகைப்படமும் இணையத்தில் வெளிவந்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் - த்ரிஷா இருவருமே மிகவும் வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்...
Listen News!