• Sep 21 2024

படப்பிடிப்பிலிருந்து கோபத்துடன் வெளியேறிய த்ரிஷா...காரணம் லாரன்ஸ் தானா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பலராலும் அறியப்பட்ட ஒரு பிரபலமான நபரே இயக்குநர் வாசு. இவர் திரைக்கதை இயக்குநர் மட்டுமன்றி திரைப்பட நடிகராகவும் இருக்கின்றார். இவர் தமிழ் மொழியில் மட்டுமன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

சினிமாவில் படங்களை பொறுத்தவரையில் கதைக்காக மக்கள் மத்தியில் பிரபலமாகுவதே அதிகம். ஆனால் வாசுவின் படங்களை பொறுத்தவரையில் கதையினையும் தாண்டி வணிக ரீதியான வெற்றியின் காரணமாவும் மக்கள் மத்தியில் அறியப்படுகின்றது.

இவர் 'பன்னீர் புஷ்பங்கள், சின்னத்தம்பி, பாண்டித்துரை, உழைப்பாளி, சந்திரமுகி, மன்னன்' உள்ளிட்ட நெஞ்சை விட்டு அகலாத பல படங்களையும் இயக்கியிருக்கின்றார். இந்தப் படங்களில் 'சந்திரமுகி' படமானது மாபெரும் வெற்றியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்தும் பல படங்களை இயக்கியிருக்கின்றார். இவ்வாறாக எப்போதுமே சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்ற வாசு தற்போது 'சந்திரமுகி 2' படத்தை இயக்கி வருகின்றார்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எடுத்திருந்தார். ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு நடிகை சாய் பல்லவியிடமே வாசு முதலில் கதையினை கூறி இருக்கின்றார். எனினும் சாய் பல்லவி படத்தின் கதையில் இதை மாற்றுங்கள், அதை மாற்றுங்கள் என அதிக பிரசிங்கித்தனமாக நடந்து கொண்டிருந்தார். இது பிடிக்காமையினால் இயக்குநர் சாய் பல்லவிக்கு பதிலாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால் தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது என்னவென்றால் த்ரிஷாவும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். இவ்வாறு த்ரிஷா விலக்கியமைக்கான முக்கிய காரணம் ராகவா லாரன்ஸ் தான் என்று கூறப்படுகிறது. அதாவது ராகவா லாரன்ஸ் இப்போது ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் அவரால் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர முடியவில்லையாம். எப்போதுமே இதனால் தாமதமாகவே வருவார். மேலும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தன்னுடைய இஷ்டத்திற்கு ஏற்ப வந்து செல்கிறாராம். லாரன்ஸ் உடைய இந்தக் காரணங்கள் படப்பிடிப்பிற்கு சில இடைஞ்சல்களையும் கொடுத்திருக்கிறது

அந்த வகையில் அவர் வந்து செல்லும் நேரத்திற்கெல்லாம் த்ரிஷாவும் வந்து படத்தினை நடித்துக் கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் வாசு த்ரிஷாவிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் கோபமடைந்த த்ரிஷா "அவர் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால் வந்து நடிக்க முடியாது" என்று கூறிவிட்டு படத்திலிருந்து விலகி விட்டாராம். இப்படி ஒவ்வொருவராலும் மாறி மாறி பிரச்சனை வரும் என்று கொஞ்சம் கூடி எதிர்பார்க்காத வாசு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையில் இருப்பதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இனி 'சந்திரமுகி 2' இல் யார் கதாநாயகியாக நடிக்க வருவாரோ என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement