• Sep 19 2024

உலகநாயகன் கமல் சித்தா படம் பற்றி கூறியது இதுத்தான்.... சந்தோசத்தில் நடிகர் சித்தார்த்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், டோலிவுட் என பல மொழி படங்களிலிலும் நடித்து வரும் சித்தார்த். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்த  சித்தார்த் இயக்குநர் ஷங்கரின் " பாய்ஸ்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றிகண்டார்.  வித்யாசமான கதைக்களங்களாக தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார் சித்தார்த்.


தற்போது "சித்தா" என்ற மேலும் ஒரு வித்யாசமான படத்தில் நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய அருண்குமார்  இப்படத்தை இயக்கியுள்ளார்.


நேற்று இப்படத்தின் பிரஸ் ஷோ நடைபெற்ற நிலையில் படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டனர்.இன்றைய சமூகத்திற்கு ஏற்ற ஒரு படைப்பாக இப்படம் இருப்பதாக பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் சித்தார்த் இப்படத்தில் நடுத்தவ வயது சாதாரண இளைஞனாக நடித்துள்ளார் . அவரை போலவே படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமும் தங்களின் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் மீடியா வரை அனைவரும் படத்தை பார்த்து பாராட்டி வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். 



Advertisement

Advertisement