• Sep 20 2024

தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் வீடா இது?- வெளியான வீடியோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!



தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சிறந்த தொகுப்பாளராக பல விருதினை பெற்றவர் தான் மாகா பா ஆனந்த்.இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார்.

ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.

கலைஞர்கள் எப்போதும் ஒரே துறையில் இருப்பது இல்லை. ஒன்றில் சாதனை செய்தால் வேறொரு கலையில் ஆர்வம் காட்டி வருவதும் தெரிந்ததே .அப்படி ரேடியா ஜாக்கியாக இருந்து பின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் தான் மாகாபா ஆனந்த்.இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதும் தெரிந்ததே.

தொகுப்பாளர் என்ற பணிக்கு புதியவராக அது இது எது நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பித்த அவர் இப்போது எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.மாகாபா இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டது.

இவரும் எல்லா சின்னத்திரை பிரபலங்களை போல யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அவரது வீட்டில் என்னவெல்லாம் வைத்துள்ளார் பாருங்க,


Advertisement

Advertisement