• Jul 05 2026

இளசுகளின் புதிய க்ரஷ் இவரா.? இணையத்தை சூடேற்றிய பிரபல நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சமீப காலமாக இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக திகழ்கிறார் மிருணாள் தாகூர். தனது அழகான தோற்றம், இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். 


குறிப்பாக தென்னிந்திய திரைப்படங்களில் குடும்பப் பெண் மற்றும் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள அவர், பாலிவுட்டில் கவர்ச்சியான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஸ்டைலிஷ் உடையில் அவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "கண்களை கவரும் பேரழகு.." என பல்வேறு விதமாக அவரை பாராட்டி வருகின்றனர். சிலர் அவரது சிரிப்பையும், அவரது ஃபேஷன் சென்ஸையும் புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement