• Sep 20 2024

கை கடிகாரத்திற்கென்றே தனி பீரோ வைத்திருக்கும் நயன்தாரா..? விலையை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கேரளா மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் திருவல்லா பகுதியைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியா குரியன்.2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் திரையுலகில் ஐயா திரைப்படமே இவருக்கு ஹிட் கொடுத்தது.

அதை தொடர்ந்து தமிழ் திரையுலகில் சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.மலையாளம்,தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகையாக வலம் வந்தவர் தான் இந்த நயன்தார்.

இவ்வாறுஇருக்கையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இவர்களுக்கு காதல் ஏற்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 09.06.2022 இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இப்போது மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்தியுள்ள நயன்தாரா, ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

நடிகை நயன்தாராவின் படப்பிடிப்பை தாண்டிய புகைப்படங்கள் எப்போது வந்தாலும் அவரது கையில் விதவிதமாக வாட்ச் இருக்கும். வாட்ச் அணிய பிடிக்கும் என்பதாலேயே அதற்காகவே ஒரு தனி பீரோவே வைத்துள்ளாராம்.

அவருக்கு மிகவும் பிடித்த பிராண்ட் Richard Mille தானாம். இந்த பிராண்ட் வாட்ச்களின் விலை ரூ. 1 கோடிக்கு மேல் தான் இருக்குமாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement