• May 19 2024

பல மடங்கு எகிறிய படத்தின் பட்ஜெட்.. சோகத்தில் கார்த்தி பட தயாரிப்பாளர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் தான் கார்த்தி.

இவர் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் சர்தார் படத்திலும் நடித்துமுடித்துள்ளார்

மேலும் இதில் சர்தார் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்குகிறார். இப்படத்தை எஸ். லக்ஷ்மன் குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

இப்படத்தை துவங்கும் பொழுது இப்படத்தின் பட்ஜெட் ரூ. 47 கோடி என இயக்குனர் பி.எஸ். மித்ரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளியாக காத்திருக்கும் நிலையில், பட்ஜெட்டில் இருந்து ரூ. 11 கோடி அதிகமாகி இருக்கிறதாம்.

இதனால், இப்படத்தின் தயாரிப்பாளர் சோகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement