தமிழ் சினிமா உலகில், நேர்மையும், நியாயமும் கொண்ட படங்களை உருவாக்க விரும்பும் இயக்குநர்களுக்கு இடம் கொடுப்பது கடினம் என்றே சொல்லவேண்டும். அந்த வகையில், இயக்குநர் ஷெரிஃபின் இயக்கத்தில், பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) வெளியானது.
படம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன், சமூக வலைத்தளங்களிலும் சரியான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனால், இப்படத்திற்கு எதிராக தற்பொழுது சில தடைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘காந்தி கண்ணாடி’ என்பது ஒரு சமூக மற்றும் நெறிப்பண்பாடுகளைக் குறிக்கும் திரைப்படமாகும். இதில், நம் நாட்டு மக்கள் எதிர்கொள்கின்ற அநீதிகள், அரசியல் நாடகங்கள், மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகள் போன்றவை முக்கியமான கருப்பொருள்களாக இடம்பெறுகின்றன.
KPY பாலா, இதுவரை நம்மால் பார்த்திராத ஒரு பக்கதுடன் இந்த கதையில் நடித்துள்ளார். அவரது நுணுக்கமான நடிப்பு, குறிப்பாக உணர்ச்சி வெளிப்பாடுகள் மற்றும் பாசமும் போராட்டமும் கலந்த நடிப்பு , ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவ்வளவு நல்ல விமர்சனங்கள் இருந்தாலும், திரையரங்குகளில் படத்திற்கு அநேகமான இடங்களில் ஷோக்கள் கிடைக்கவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய விஷயம். இயக்குநர் ஷெரிஃப் இதுகுறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
" தியேட்டர்களில் ஷோக்கள் மறுக்கப்படுதல் மற்றும் பேனர்கள் வைப்பதில் தடங்கல்கள் இருத்தல் என்பன மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது." என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
Listen News!