• Sep 06 2025

ஹீரோவாக அறிமுகம் டென் கருணாஸ்…! ஹீரோயின்கள் யார் யார் தெரியுமா?

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

2019ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக கென் கருணாஸ் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்வுப்பூர்வமான நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. அதன் பிறகு 'வாத்தி' மற்றும் 'விடுதலை பாகம் 1' போன்ற முக்கிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களை செய்துள்ள அவர், தொடர்ந்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்துள்ளார்.தற்போது, கென் கருணாஸ் இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது முதல் இயக்கப் படத்தில் கென் கருணாஸ்தானே கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.


இந்தப் புதிய படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர் – தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீதேவி அப்பல், மலையாள நடிகை அனிஷ்மா மற்றும் ஹிந்தி சீரியல் உலகில் பிரபலமான பிரியன்சி ஆகியோர். இந்த  கூட்டணி, இந்தியாவின் பல பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படம் செய்முறை பணிகளில் இறங்கி உள்ளதுடன், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்படம் ஆன்டியன்ஸ் மற்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருணாஸ் குடும்பத்தில் இருந்து ஒரு புதிய தலைமுறை ஹீரோ உருவாகும் இந்த முயற்சி, தமிழ் சினிமாவில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் வாய்ப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.

Advertisement

Advertisement