பிக் பாஸ் சீசன் 8, 50 நாட்களை கடந்துள்ள நிலையில், நிகழ்ச்சியின் மந்தநிலை குறித்து ரசிகர்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர். முதல் சில வாரங்களில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது, மேலும் போட்டியாளர்கள் தங்கள் "நல்லவர்" தோற்றத்தை மட்டுமே காட்ட முனைந்ததாகவும் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெறும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை ஃபேட்மேன் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி என ஆறு பேர் வெளியேறியுள்ளனர். தற்போது வீட்டில் முத்துக்குமரன், வி.ஜே. விஷால், அருண், தீபக், ரஞ்சித், ஜெஃப்ரி, சத்யா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா ஜனனி, தர்ஷிகா, சாஞ்சனா, ராயன், மஞ்சரி, ஷிவ்குமார், ராணவ் மற்றும் ஆனந்தி என 18 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.
இந்த வாரம் டபுள் எவிக்ஷனுக்காக சாஞ்சனா மற்றும் ஆனந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சாஞ்சனா, சீசன் தொடக்கத்தில் 24 மணி நேரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டவர். பின்னர் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, பிக் பாஸ் அவரை மீண்டும் வீட்டுக்குள் அனுமதித்தது.
ஆனால், இந்த வாரம் அவர் மீண்டும் வெளியேறுவதாக கூறப்படுவது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மற்றொரு போட்டியாளரான ஆனந்தி, எந்த குழுவின் ஆதரவும் பெறாமல் தைரியமாக தனியாக விளையாடியவர். அவரின் விளையாட்டுத் திறமை மற்றும் நேர்மையான அணுகுமுறையால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. ஆனால், தற்போது அவர் வெளியேறுவதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன மற்றும் இவை உத்தியகபூர்வ தகவல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!