விஜய் தொலைக்காட்சி, தனது ரியாலிட்டி ஷோக்களுடன் மட்டுமல்லாமல், சீரியல்களாலும் ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 'சிறகடிக்க ஆசை', 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2', 'பாக்கியலட்சுமி', 'மகாநதி', 'ஆஹா கல்யாணம்' போன்ற தொடர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அதில், 'மகாநதி' சீரியலின் பிரபல ஜோடி சுவாமிநாதன் மற்றும் லட்சுமி ப்ரியா, தற்போது ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள ஹிட் ஜோடியாக உள்ளனர். இந்த ஜோடி எந்த ஒரு விருது விழாவிலும் முக்கிய அங்கமாக இருப்பது வழக்கமானதாகிவிட்டது.அது மட்டுமல்லாமல் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையில் சேராதா? எனும் ஏக்கத்திலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று 'மகாநதி' சீரியல் நடிகர் சுவாமிநாதனின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மற்றும் இருவரும் ஜோடி போட்டு கேக் வெட்டியுள்ளதுடன் சீரியலின் குழுவினரும், சக நடிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Listen News!