• Jan 15 2025

மொத்த சஸ்பென்ஸும் நாளைக்கு தெரியும்.. அர்ச்சனா வெளியிட்ட அதகள அப்டேட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார்.

கோட் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இது தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் நாளாந்தம் வெளியான வாரே உள்ளன. இதுவரை மூன்று பாடல்கள் கோட் படத்திலிருந்து வெளியானது. ஆனாலும் அதில் இறுதியாக வெளியான ஸ்பார்க் பாடல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு காரணம் விஜயை இளமையாக காட்டுவதாக நினைத்து டெக்னாலஜியை வைத்து அவரின் கெட்டப்பை மாற்றியது தான்.

தற்போது கோட் படத்தின் டிரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் நேற்றைய தினம் இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா சற்று பொறுத்திருக்குமாறு தான் பெரிய அளவில் ரெடி பண்ணுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.


இந்த நிலையில், இன்றைய தினம்  தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ச்சனா, கோட் பட டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். 

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படத்தின் டெய்லர் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement