• Dec 30 2024

தமிழகத்திலுள்ள விஜய் ரசிகர்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு.. போலீசார் விதித்த தடை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான மங்காத்தா படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது இளைய தளபதி நடிப்பில் கோட் படத்தை இயக்கியுள்ளார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் காணப்படுகிறது.

கோட் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி, மோகன் உட்பட பலர் நடிப்பதோடு இந்த படத்தின் வில்லன் இன்னொருவரும் உள்ளதாக வெங்கட் பிரபு சஸ்பென்ஸ் வைத்துள்ளார்..

செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுஷ்டி பண்டிகை முன்னிட்டு விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஏகப்பட்ட திரையரங்குகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரையில் ஹவுஸ்புல் ஆகி வருகின்றன.

தற்போது கோட் படத்தின் டிக்கெட்டுகளை பெறுவதற்காக சத்யம் திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் காட்சிகள் சமூக வலைதள பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


இந்த நிலையில், தமிழகத்தில் கோட் படத்திற்கு வரவேற்பு இருந்தாலும் ரசிகர்கள் கட்டவுட், பேனர்கள் வைப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளார். இதன் காரணத்தினால் சென்னை மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

எனினும், தங்களது பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரசிகர்கள் சார்பில் முறைப்படி அனுமதி கேட்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களை காட்டி போலீசார் நிர்வாகித்தினரும் அனுமதி மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement