• Jan 22 2025

பெண்களுக்கான அநீதியை முறியடிக்க வேண்டும்! பொங்கி எழுந்த தங்கலான் பட நடிகை!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை பார்வதி தமிழில் சில படங்கள் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் "பெண்கள் ஒன்று சேர்ந்தால் அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும்" என்று பெண்களுக்காக பேசியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. 


தமிழில் சினிமாவில்  பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து  நடித்துள்ள பார்வதி மலையாளத்தில் பிரபல நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் பார்வதி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது. "நான் நடிக்க வந்த போது நடிகைகள் கொஞ்சம் படங்களில் நடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளவும், சினிமாவை விட்டு விலகவும் கட்டாயப்படுத்தப்பட்டனர்" என்று கூறினார்.


மேலும் "பெண்களே பெண்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற கட்டுக்கதையை முறியடிக்க பெண்களுக்கு இடையே கூட்டணி தேவை. பெண்கள் ஒன்று சேர்ந்தால் நீதி கிடைக்கும். மலையான நடிகர் சங்கம் அதை நிறைவேற்ற தவறி விட்டது. சினிமாவில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலங்களை மையப்படுத்தி எதிர்காலத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement