• Jan 02 2025

ஜப்பானை நோக்கி படையெடுக்கும் டிமான்டி காலனி படக்குழுவினர்! அடுத்த சம்பவம் லோடிங்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருள்நிதி நடிப்பில் வம்சம், இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி, மௌனகுரு போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன.

இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் நிறைந்த கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாவது பாகம் வெளியானது. அதில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

d_i_a

திகில் நிறைந்த விறுவிறுப்பான கதைகளத்துடன் உருவான இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்று, சுமார் 100 கோடிகளை கடந்து வசூலில் சாதனையும் படைத்திருந்தது.


இந்த நிலையில், டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கூடிய விரைவிலேயே டிமான்டி காலனி படத்தின் மூன்றாவது பாகம் ஜப்பானில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 35 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தை PassionStudios மற்றும் மும்பையைச் சேர்ந்த GoldMines நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, அருள்நிதி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement