• Mar 12 2025

"பேபி ஜான்" திரைப்படம் படு தோல்வியா..? பாரிய நஷ்டத்தில் சிக்கிய அட்லீ ..!

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் உருவான தெறி படத்தால் அட்லீயின் திரைப்பயணம் பெரிய அளவில் வளர்ந்தது. அதன் பிறகு மெர்சல், பிகில் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இவர் ஹிந்தி சினிமாவில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் ரூ. 1000 கோடி வசூலித்து பெரும் வெற்றியை அடைந்தது.


இந்நிலையில் அட்லீ தற்போது ஹிந்தியில் "பேபி ஜான்" என்ற படத்தினை தயாரித்துள்ளார்.இப்படத்தில் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படம் கடந்த டிசம்பர் 25 கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக வெளியானது.


தெறி படத்தின் ஹிந்தி ரீ மேக் செய்யப்பட்ட இப் படத்தை அட்லீ ரூ. 160 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தார் ஆனால் தற்போது அந்த படத்தின் வசூல் மிகவும் குறைவாக, வெறும் ரூ. 23 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.பாரிய எதிர்பார்ப்பில் தயாராகிய இப் படத்தினால் அட்லி மற்றும் பிரியா 100 கோடி அளவில் நஷ்டத்தினை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement