• Jan 18 2025

பிக் பாஸ் வீட்டில் இறங்கியடிக்கும் சவுண்டு சௌந்தர்யா.. விஜே விஷாலுக்கு குறும்படம் உறுதி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களாக ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் காணப்படுகின்றார்கள்.

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், நான்கு போட்டியாளர்கள் எலிமினிட்டாகி வெளியே செல்ல, ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் சாதாரணமாக காணப்பட்ட சௌந்தர்யா தற்போது அதிரடியாக களமிறங்கி உள்ளார். இவர் தன்னுடைய குரலால் இதுவரை பேசாமல் இருந்தார். ஆனாலும் தற்போது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சக போட்டியாளர்களை இறங்கி அடித்து வருகின்றார். சௌந்தர்யா இப்படியே விளையாடினால் கண்டிப்பாக பைனல் வரை செல்வார் என்று ரசிகர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.


பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக காணப்படுபவர்கள் தான் சௌந்தர்யாவும் விஷாலும்.. இவர்கள் ஒருவரை ஒருவர் எப்போதும் நாமினேட் செய்து வருவார்கள். இருவருக்கு இடையே மோதல்கள் இருந்தாலும் விஷாலின் நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அவர் சௌந்தர்யாவின் கேரக்டரை குறித்து தொடர்ந்து ஏனைய ஆண் போட்டியாளர்களுடன் விவாதித்து வருவது தான்.

ஆனாலும் கடந்த இரண்டு வாரங்களாக விஷால் சௌந்தர்யா பற்றி புறம்பேசி வந்த போதிலும் விஜய் சேதுபதி இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் கடந்து செல்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் இதுவே கமலாக இருந்தால் கண்டிப்பாக விஷாலுக்கு குறும்படம் போட்டு காட்டி இருப்பார். ஆனால் விஜய் சேதுபதி முக்கியமான விஷயங்களை தவிர்த்து வருகின்றார் என ஆதாரத்துடன் விமர்சித்து வருகின்றார்கள்.

எனவே இந்த முறை சரி விஜய் சேதுபதி விஷாலை கண்டிப்பாரா? இல்லை வழக்கம் போல கடந்து செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனாலும் சௌந்தர்யா பற்றி விஷால் பேசியதற்கு கண்டிப்பாக குறும்படம் போட்டு காட்டவே வேண்டும் என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement