• May 21 2024

காதல் பட நடிகர் பாபுவுக்கு நடந்த சோகம்- இப்படியொரு சோகமா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்ததோடு படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது. இப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருப்பதோடு இப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார்.

 மதுரை அருகே நடந்த உண்மையான சம்பவத்தை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது . இதில் விருச்சககாந்த் என்ற சின்ன கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்திருந்தார் பாபு. ஒல்லியான உடல்வாகுடன் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் எனக் கூறி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார் பாபு. 


இந்த ஒரே காமெடியால் பிரபலமான பாபுவுக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால், கடைசியாக விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலும் சிறிய காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் வருமானத்துக்கு வழியில்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார்.


 இதனால், அவருக்கு அபி சரவணன் போன்ற சில திரையுலக பிரபலங்கள் உதவி செய்து வந்தனர். இதனிடையே பாபுவின் அம்மா, அப்பா இருவருமே உயிரிழந்துள்ளனர்.இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த பாபு, யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், மதுரையில் தனியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பாபு ஆட்டோவில் உயிரிழந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. 


Advertisement

Advertisement