• May 01 2024

மார்க் மட்டுமே முக்கியம் இல்லை வாழ்க்கையைப் படியுங்க- மாணவர்களுக்கு பரிசு வழங்கிய சூர்யா கொடுத்த அட்வைஸ்ட்

stella / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகுமார் 1979ம் ஆண்டு சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இந்த அறக்கட்டளை மூலம், ஆண்டுதோறும் பல மாணவர்களின் கல்வி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் இன்று பெற்றோரை இழந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா வழங்கினார்.

சென்னை சாலி கிராமத்தில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் நடிகர் சூர்யா,மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி பேசினார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அனைவருக்கும் சரியான சமமான கல்வி வழங்க அகரம் அறக்கட்டளை முயற்சி எடுத்து வருகிறது.


கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். காலையில் சீக்கிரம் எழ வேண்டும். அதை நான் இப்போதும் கடைபிடைக்கிறேன். பிறரை பழி சொல்லுதல், பிறரை பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் வீண் சொல், பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்ககூடாது.

மார்க் மட்டுமே கல்வி கிடையாது. அப்படிப்பட்ட கல்வியை நம்மை சுற்றி அழகாக வைத்திருப்பதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவை. அப்படிப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு நான் தலை வணங்குகிறேன். தற்போது அகரம் அரசோடு இணைந்து கடந்த மூன்று வருடமாக செயலாற்றி வருகிறது. கல்வியில் இருந்து விடுபட்ட மாணவர்களை அரசோடு அகரமும் இணைந்து அவர்களுக்கு மீண்டும் கல்வியை கொடுக்க முயற்சி செய்கிறது.


கடந்த 14 வருடங்களாக சமமான கல்வி, சரியான கல்வி கொடுக்க வேண்டும் என்ற ஒரு மனதோடு உள்ள மனிதர்களுடனும் அமைப்புகளுடனும் சேர்ந்து இதுவரைக்கும் 5200 மாணவ மாணவியருடைய வாழ்க்கையே எங்களால் தொடமுடிந்தது. ஆனால் தற்போது அரசுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் ஒரு லட்சம் மாணவர்களுடைய வாழ்க்கையை மாற்ற முடிந்தது என்று சூர்யா அந்த விழாவில் பேசினார்.


Advertisement

Advertisement

Advertisement